கட்சியை காப்பாற்ற மகனை தவிர வேறு தெரிவு மகிந்தவிடம் இல்லை - ரவூப் ஹக்கீம்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கட்சியை காப்பாற்ற மகனை தவிர வேறு தெரிவு மகிந்தவிடம் இல்லை - ரவூப் ஹக்கீம்

ஊழல், மோசடி குற்றங்களிலிருந்து தம்மை பாதுகாக்கவே ரணிலை ராஜபக்ஷக்கள் ஜனாதிபதி ஆக்கினார்கள். ஆனால், அவர் பொதுஜன பெரமுன கட்சியையே நாசமாக்கி விட்டார். இன்று கட்சியை காப்பாற்ற மகிந்த ராஜபக்ஷ தனது மகனை தேர்தலில் களமிறக்கியுள்ளார். மகிந்தவுக்கு வேறு எந்தத் தெரிவுகளும் இல்லை. இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

களுத்துறை பண்டாரகமையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், அறகலய போராட்டத்தின் பின்னர் ராஜபக்ஷக்கள் ரணில் விக்கிரமசிங்கவை நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தார்கள். எவ்வாறாயினும் சர்வதேச ரீதியில் எழுப்பப்படும் குறைகளை மற்றும் தவறுகளைத் தவிர்ப்பதற்காக "நாட்டின் தலைமை பொறுப்பை சஜித் பிரேமதாஸவுக்கு பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், சஜித் பிரேமதாஸ அழைப்பை ஏற்று நாட்டைப் பொறுப்பெடுக்கவில்லை என்று ரணில் விக்கிரமசிங்க இன்றும் கூறுகிறார்.

ஆனால், அன்று ராஜபக்ஷர்கள் முயற்சி செய்தது நாட்டின் பொறுப்பை சஜித் பிரேமதாஸவிடம் ஒப்படைத்து சஜித் பிரேமதாஸவை நாசமாக்கவே. அதுபற்றி நாங்கள் நன்றாகவே அறிந்திருந்தோம். "இந்தத் தருணத்தில் நாட்டின் தலைமைப் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம்" என நாங்கள் கூறினோம்.

ஜே. ஆர். ஜெயவர்த்தன அனைத்து நீதிபதிகளையும் வீட்டுக்கு அனுப்பினார். ரணில் விக்கிரமசிங்க இன்று நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளை மீறிச் செயல்படுகிறார். சட்டத்தரணிகளுக்கும் நீதிமன்றங்களுக்கு இடையே சண்டையை உண்டுபண்ணவே ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார் என்றும் கூறினார்.


எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

கட்சியை காப்பாற்ற மகனை தவிர வேறு தெரிவு மகிந்தவிடம் இல்லை - ரவூப் ஹக்கீம்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)