
posted 18th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஒற்றுமையை காட்டவே தமிழ் பொது வேட்பாளர் சித்தார்த்தன் எம். பி.
தமிழ மக்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை உலகுக்கு காட்டுவதுதான் எங்கள் விருப்பம். அதுதான் தமிழ் பொது வேட்பாளர் விடயம் - இவ்வாறு கூறியுள்ளார் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன்.
தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை மக்களில் பலர் விரும்புகிறார்கள் - சிலர் விரும்பவில்லை - சிலர் இது ஒரு விஷப் பரீடசையாக இருக்கும் என்கிறார்கள். சிலவேளைகளில் நாம் விரும்பக்கூடிய வாக்குகளை பெறாவிட்டால் அது பாதிப்பு என நினைக்கிறார்கள். கட்சிகள் ஒற்றுமையாக இருக்கின்றன. கட்சிகள் ஒற்றுமையாக சொல்வதை மக்கள் கேட்கிறார்கள் என வெளிநாடுகள் நம்பும்நிலை வரும் - ஒற்றுமையை காட்ட வேண்டும்.
தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராசாகூட அதன் முக்கியத்துவம் தொடர்பில் கூறியுள்ளார். புதிதாக தெரிவு செய்யப்படட தலைவர் சிறீதரன்கூட அது சரியென சொல்லியுள்ளார். இப்படியாக தமிழ் அரசுக் கட்சியில் இருக்கக்கூடிய பலர் ஒத்துக் கொள்கிறார்கள்.
இப்படியாக எல்லோரும் ஒற்றுமையாக வரக்கூடிய ஒரு நிலையில், நாம் எமது பலத்தை காட்டக்கூடியதாக இருக்கும். ஒற்றுமையை காட்டுவதன் மூலம் நாம் உலக நாடுகளிடையே எமது சரியான நிலைப்பாட்டை காட்டக்கூடியதாக இருக்கும். அதற்காகவே இந்த முயற்சியை செய்கிறோம் - என்றார்.
நேற்றுமுன்தினம் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)