எஸ். டி. எஸ்ஸின் 100ஆவது ஆண்டு பிறந்தநாளன்று ஞாபகார்த்த முத்திரை வெளியீடு
எஸ். டி. எஸ்ஸின் 100ஆவது ஆண்டு பிறந்தநாளன்று ஞாபகார்த்த முத்திரை வெளியீடு

எஸ். டி. சிவநாயகம்

பிரபல பத்திரிகையாளரான எஸ். டி. எஸ். என்று அறியப்பட்ட எஸ். டி. சிவநாயகத்தின் 100ஆவது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை நாளைபுதன்கிழமை வெளியிடப்படுகின்றது.

இந்த நிகழ்வு புதுசெட்டிதெரு சாய் மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கை முத்திரை பணியகம் செய்து வருகின்றது.

மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வெ. இராதாகிருஷ்ணனின் வழிக்காட்டலில் மூத்த பத்திரிகையாளர் எச். எச். விக்கிரமசிங்க அண்மையில் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அலகப்பெருமவை சந்தித்து எஸ். டி. எஸ். சிவநாயகத்தின் பத்திரிகை, ஆன்மீக பணிகள் குறித்து விளக்கிக் கூறினார். இதைத் தொடர்ந்து எஸ். டி. எஸ். சிவநாயகம் நினைவாக முத்திரை வெளியிட அமைச்சர் ஏற்பாடுகளை செய்தார்.

பழம்பெரும் பத்திரிகையாளரான எஸ். டி. எஸ். சிவநாயகம் கொழும்பில் வெளியான தினபதி - சிந்தாமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியராக பணியாற்றியவர். இவர், தினகரன், சுதந்திரன், வீரகேசரி, சூடாமணி பத்திரிகைகளின் ஆசிரியராகவும் விளங்கியிருந்தார். 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி இவர் பல முன்னணி பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களை உருவாக்கியிருந்தார்.

சாயி பக்தரான இவர் சத்திய சாய் பாபா மத்திய நிலையத்தையும் கொழும்பில் ஸ்தாபித்ததுடன் 25 வருடங்கள் அதன் தலைவராகவும் செயல்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் ஞாபகார்த்த முத்திரை விற்பனை மூலம் கிடைக்கும் நிதி தற்போது புது செட்டித்தெரு சாய் நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இராஜகோபுர பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

எஸ். டி. எஸ்ஸின் 100ஆவது ஆண்டு பிறந்தநாளன்று ஞாபகார்த்த முத்திரை வெளியீடு

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House