எரிபொருள் வந்த பாதையோ, போகும் இடமோ தெரியாமல் வினவும் மக்கள்

துணுக்காய் பல நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பும் நிலையமான மல்லாவி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் துணுக்காய் பல நோக்கு கூட்டுறவுச் சங்க பாரவூர்தி ஒன்றில் கொண்டு வரப்பட்ட இரு பரல்களில் இன்று காலை பெற்றோல் அடிக்கப்பட்டபோது அங்கு மக்கள் சூழ்ந்து பாரவூர்தியை முற்றுகையிட்ட நிலையில் எரிபொருள் நிலையச் சூழலில் பெரும் குழப்ப நிலை உருவாகியது.

இவ்வாறு பரல்களில் பெற்றோல் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு கூட எரிபொருள் இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த பெற்றோல் எங்கிருந்து வந்தது எனவும் மக்கள் கேள்வி எழுப்பினர்.

குறித்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டதுடன், பொலிஸ் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

இதேவளை குறித்த பகுதிக்கு துணுக்காய் பிரதேச செயலாளர் மற்றும் துணுக்காய் பல நோக்கு கூட்டுறவு சங்க போது முகாமையாளர் மற்றும் தலைவர் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இதேவேளை, துணுக்காய் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருளை ஏற்றிய பார ஊர்தி மக்களின் குழப்பநிலையினை அடுத்து மல்லாவி பொலிஸாரினால் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மக்களுடன் பிரதேச செயலாளர் கலந்துரையாடினார்.

பிரதேச செயலாளருடன் கலந்துரையாடிய மக்கள் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்தனர்.

எரிபொருள் வந்த பாதையோ, போகும் இடமோ தெரியாமல் வினவும் மக்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY