எதிர்கட்சியினரை சாடுவது பொருத்தமற்றது  - சாணக்கியன்

மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை அரசாங்கத்திற்கு வழங்கி விட்டு எதிர்கட்சியினரை சாடுவது பொருத்தமற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் 'விசேடமாக இன்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்தின் யோசனை மற்றும் எதிர்கால திட்டமிடல் குறித்து அவதானம் செலுத்தப்பட்டு நாடாளுமன்ற உரை இடம்பெறுகின்றது.

ஆனால் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் கடந்த அரசாங்கம் தொடர்பில் கருத்துரைக்கிறார்கள். நாட்டு மக்கள் எதிர்கால திட்டமிடல் குறித்து எதிர்பார்த்துள்ளார்களே தவிர வீண் பேச்சுக்களையும் இனவாத பிரதிவாதங்களையும் எதிர்பார்க்கவில்லை.

நிதியமைச்சர் தான் இரவு காவலாளி என தன்னை குறிப்பிட்டுக் கொள்கிறார். அவர் நாடாளுமன்றில் இலங்கையின் நிதி மற்றும் நீதியமைச்சர் என்ற அடிப்படையில் கருத்துரைக்காமல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணியாக கருத்துரைக்கிறார்.

ஜனாதிபதியின் தீர்மானங்களை நியாயப்படுத்தி அதனை சரி செய்யும் வகையில் கருத்துரைக்கிறார். தான் தான் நிதியமைச்சர் என்பதை அவர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நாட்டு மக்கள் பரிதாப நிலையில் உள்ளார்கள். முச்சக்கர வண்டி செலுத்தும் சாரதி எரிபொருள் பெற்றுக்கொள்ளும் போதும், தாய்மார்கள் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்கும் போது, பாரிய அசௌகரியங்களை எதிர்க்கொள்கிறார்கள்.

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் டொலர் என நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானது. வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் டொலர்களாயின் பிரச்சினை இன்னும் தீவிரமடையும். எரிபொருள் கொள்வனவிற்கும் பாதிப்பு ஏற்படும்.

பிரச்சினைகள் தீவிரமடையும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு பிரச்சினைகள் விளங்காமல் உள்ளமை கவலைக்குரியது. பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும்.

சர்வதேசத்தின் மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது நம்பிக்கை கிடையாது. சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் இணக்கமாக செயற்படும் என எதிர்பார்க்கவில்லை. எதிர்க் கட்சியும் தோல்வி என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரிமாற்றிக் கொள்ளப்படுகிறது.

இதற்கு பிரதி சபாநாயகர் தெரிவு சிறந்த எடுத்துக்காட்டாகும். இத் தெரிவுக்குரிய வாக்கெடுப்பில், சுதந்திர கட்சியின் உறுப்பினருக்கு ஆதரவாக 148 வாக்குகளும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு 65 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. 3 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. நிராகரிக்கப்பட்ட வாக்குகள் பொதுஜன பெரமுன உறுப்பினர்களுடையதாக இருக்கும் என நம்புகிறேன்.

அரசாங்கத்துடன் அனைவரும் ஒன்றிணைந்துள்ளார்கள். அரசாங்கத்திலிருந்து எவரும் வெளியேறவில்லை என்று குறிப்பிட முடியும். இவர்கள் அனைவரும் டீல் அரசியலில் செயற்படுகிறார்கள்.

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேணையிலும் இவ்வாறான தன்மையே நிலவும். நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றி புதிய பிரதமரை தெரிவு செய்வதால் மாத்திரம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

நிறைவேற்றுத்துறை அதிகாரத்தை குறைக்காமல் நாடாளுமன்றினால் எவ்வித தீர்மானங்களையும் முன்னேற்றகரமாக எடுக்க முடியாது. ஜனாதிபதியின் அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி வகிக்கும் வரை பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. ஜனாதிபதிக்கு வெட்கம் என்பதொன்று கிடையவே கிடையாது. நாட்டு மக்கள் இவ்வாறு விமர்சித்தும் எங்கோ ஒளிந்துக் கொண்டிருக்கிறார்.

ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்கும் யோசனை பாராளுமன்றில் கொண்டு வர வேண்டும் அல்லது 21ஆவது திருத்த சட்டத்தையாவது கொண்டு வர வேண்டும். மேலும், இன்று இடம்பெற்ற நாடகத்தினை தொடர்ந்து இவர்கள் நாட்டுக்கான தீர்மானத்தை எடுக்க முடியாது என்பது தெட்டத் தெளிவாக விளங்குகிறது.

போராட்டங்களில் பயன் உள்ளது. ராஜபக்ஷர்களின் குடும்பம் பிளவு பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டதை தொடர்ந்து ஒரு தரப்பினர் பிரதமருக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

அமைச்சரவை முழுமையாக பதவி விலகி பெயரளவிற்கு ஒரு அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.

இவ் அரசாங்கத்திற்கோ சர்வதேச மட்டத்திலும், ஏனைய நாடுகளிலும் நன்மதிப்பு கிடையாது என்பது இவற்றினால் உறுதியாகியுள்ளது.

துனிசியா என்ற நாட்டின் பென்னலி பிறிதொரு நாட்டில் உயிரிழந்தார். கடாபிக்கு என்னவாயிற்று?

எனவே, ஜனாதிபதியே! நாட்டு மக்களை அந்த நிலைமைக்கு தள்ள வேண்டாம்.

ஆகவே, மக்களின் அவலத்தைப் பாருங்கள்; மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து, நீங்கள் உங்கள் ஜனாதிபதி பதவியை விட்டு விலக வேண்டும்' எனத் தெரிவித்தார்.

எதிர்கட்சியினரை சாடுவது பொருத்தமற்றது  - சாணக்கியன்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY

Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More
Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More