
posted 11th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
உழவு இயந்திரமும், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இருவர் காயம்
உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். அம்பாறை, நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டப்பளத்துக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்துக்கும் இடையே அமைந்துள்ள அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் இந்த விபத்துச் சம்பவம் வெள்ளிக் கிழமை(09) இரவு 6. 30 மணியளவில் இடம்பெற்றது.
நெல் அறுவடை முன்னாயத்த பணியில் ஈடுபட்ட உழவு இயந்திரம் சடுதியாக பிரதான வீதியை நோக்கி இரு வழி சாலையை மறித்து திரும்ப முற்பட்ட வேளை மறுமுனையில் இருந்து வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
குறித்த விபத்து சம்பவத்தில் உழவு இயந்திரத்தை செலுத்திய சாரதி காலில் காயமடைந்ததுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களில் ஒருவருக்கு கை உடைவு ஏற்பட்டுள்ளதாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். .
மேலும், இவ்விபத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொது இணக்கப்பாட்டுடன் சமாதானமாக செல்ல முற்பட்ட போதும் சம்பவ இடத்துக்கு வருகை தந்த நிந்தவூர் போக்குவரத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டதுடன் விபத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)