உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை  செலுத்திய இலங்கைத் தமிழரசுக் கட்சி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது.

நேற்று (16) திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் த. சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் ஆகியோரால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

யாழ்.மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளுக்கும் இதன்போது கட்டுப் பணம் செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

துயர் பகிர்வோம்

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை  செலுத்திய இலங்கைத் தமிழரசுக் கட்சி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)