
posted 20th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரிக்க சுயாதீன ஆணைக்குழு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு சுயாதீன நீதி ஆணைக்குழுவை அமைப்பதற்கு நாமல் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை பேராயர் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட கத்தோலிக்க ஆயர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.
இந்தச் சந்திப்பின்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்த விசாரணைக்கான சுயாதீன நீதி ஆணைக்குழுவை அமைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தினார்.
அவரின் வலியுறுத்தலை ஏற்ற நாமல் ராஜபக்ஷ தான் வெற்றி பெற்றதும் சுயாதீன நீதி ஆணைக்குழுவை அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்தார் என்று கூறப்பட்டது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)