
posted 14th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
உயிரிழந்த இளம் தாய்க்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்த இளம்தாய் சிந்துஜாவுக்கு நீதி கோரி நேற்று (13) செவ்வாய் போராட்டம் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொது மருத்துவமனையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட இளம் தாய், குருதிப்போக்கு காரணமாக உயிரிழந்தார். அந்த நேரம் கடமையிலிருந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் பொறுப்பற்ற செயலே அவரின் மரணத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நிறைவடைந்து விட்டன என்று கூறப்பட்ட போதிலும், எவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையிலேயே இந்தப் போராட்டம் நேற்று (13) முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் பொதுமக்களுடன் உயிரிழந்த சிந்துஜாவின் குழந்தையுடன் சிந்துஜாவின் தாயாரும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)