
posted 17th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
உமாமகேஸ்வரனின் சிலை வவுனியாவில் திறந்துவைப்பு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) செயலதிபருமான உமாமகேஸ்வரனின் உருவச்சிலை வவுனியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்திக்கு அண்மையாக அமைக்கப்பட்டுள்ள அன்னாரின் சிலையை புளொட்டின் தற்போதைய தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழீழ விடுதலைக் கழகத்தின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் எனப் பலர் பங்கேற்றனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)