இவ்வருட கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்தில் 8000 பக்தர்கள்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இவ்வருட கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்தில் 8000 பக்தர்கள்

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தில் இவ்வருடம் இலங்கையிலிருந்து 4000 பக்தர்களும் இந்தியாவில் இருந்து 4000 பக்தர்களும் பங்குபற்ற அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முன்னேற்பாட்டுக் கூட்டம் யாழ் மாவட்ட அரச அதிபர் அ. சிவபாலசுந்தரம் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

பெப்ரவரி மாதம் 23ஆம், 24ஆம் திகதிகளில் கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்வம் சிறப்பாக இடம்பெறவுள்ள நிலையில் குறித்த ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

குறித்த கூட்டத்தில், இவ்வருடம் இலங்கையிலிருந்து 4000 பக்தர்களும் இந்தியாவில் இருந்து 4000 பக்தர்களும் பங்குபற்ற அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு பங்குபற்றுவோருக்கான சுகாதாரம், போக்குவரத்துஉட்பட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உணவு வழங்கல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

மாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் யாழ். இந்திய துணைத் தூதுவராலய அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச செயலர், நெடுந்தீவு பங்குத்தந்தை, யாழ்.மறை மாவட்டக் குரு முதல்வர், கடற்படையின் பிராந்திய பொறுப்பதிகாரி, பொலிஸ் உயரதிகாரிகள், இராணுவ உயரதிகாரிகள் மற்றும் துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வருட கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்தில் 8000 பக்தர்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More
Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More