
posted 19th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இலஞ்சம் வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் யாழில் கைது
கொடிகாமம் பகுதியில் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (18) வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் எழுதுமட்டுவாழ் சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரே கைது செய்யப்பட்டார். இவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை சேர்ந்தவராவார்.
இரண்டு லொறிகளில் மணல் ஏற்றிச் சென்றவர்களிடம் 43 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற்றபோது யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு விசேட பொலிஸார் அவரை கைது செய்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைக்காக பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் அழைத்து செல்லப்பட்டனர்.
கைதான பொலிஸ் உத்தியோகத்தர் முல்லைத்தீவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)