இன நல்லிணக்க இப்தார் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

நிந்தவூர் பிரதேச சபையின் வருடாந்த இன நல்லினக்க இப்தார் நிகழ்வு பிரதேச சபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில் பிரதேச சபையின் சகல தமிழ் முஸ்லிம் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களென பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

இந்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு கொவிட் நிலமை காரணமாக கடந்த வருடம் நோன்பு காலத்தில் இடம்பெறாத நிலையில் இம்முறை நிகழ்வு சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் இறுதியில் நாட்டு மக்கள் தற்பொழுது அனுபவித்துவரும் துயரங்கள் நீங்கவும் நாடு நல்ல நிலைக்கு வரவும், நல்ல ஆட்சி அமையவும் விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் நிகழ்வில் உரையாற்றும் போது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான புனித நோன்பு காலம் தான தர்மங்களுக்கும் இன நல்லிணக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகின்றது.

அந்த வகையில் இப்தார் நிகழ்வுகள் இன நல்லினக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இடம்பெற்று வருவது ஒரு முன்னுதாரணமாகும் என்றார்.

இன நல்லிணக்க இப்தார் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY