இந்த அந்தரக் கிளைகள் கவிதை நூல் வெளியீடு
இந்த அந்தரக் கிளைகள் கவிதை நூல் வெளியீடு

கவிஞரும், பாடலாசிரியருமான “வியன்சீர்” எழுதிய “இந்த அந்தரக் கிளைகள்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் செ. யோகராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூலின் முதல் பிரதியினை மட்டக்களப்பு தமிழ்ச் சங்கப் பொருளாளர் தேசபந்து மு. செல்வராஜாவும், சிறப்புப் பிரதியினை மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புலவர் வி.றஞ்சிதமூர்த்தியும் பெற்றுக் கொண்டனர்.

இதன்போது நூலாசிரியர் அறிமுகவுரையினை கவிஞர் அரசையூர் பகீரதனும், நூல் நயவுரையினை கவிஞர் மேராவும், ஏற்புரையினை நூலாசிரியர் வியன்சீரும் நிகழ்த்தினர். அத்தோடு கலை நிகழ்வுகளும் அரங்கேறின.

“இந்த அந்தரக் கிளைகள்” கவிதை நூல் பிறப்பு தொடக்கம் இறப்பு வரை மனிதன் தன்னகத்தே காணும் ஒவ்வொரு உணர்வுகளையும் மிகவும் துல்லியமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் எடுத்தியம்பும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. இந்த வையகத்தின் மனித ஜீவராசிகளின் அத்தனை உணர்வுகளுக்கும் மொத்தமாய் வடிவமெடுத்துள்ளது என இங்கு உரையாற்றியோரால் தெரிவிக்கப்பட்டது.

இந்த அந்தரக் கிளைகள் கவிதை நூல் வெளியீடு

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

Varisu - வாரிசு - 07.02.2026

Varisu - வாரிசு - 07.02.2026

Read More
Varisu - வாரிசு - 03 -06.02.2026

Varisu - வாரிசு - 03 -06.02.2026

Read More