இந்திய துணைத் தூதரக ஏற்பாட்டில் நெடுந்தீவில் சர்வதேச யோகா தினம்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்திய துணைத் தூதரக ஏற்பாட்டில் நெடுந்தீவில் சர்வதேச யோகா தினம்

யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் முதன்முறையாக நெடுந்தீவில் நடைபெற்றது.

கடந்த சனிக்கிழமை (01) நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சுமார் 250 மாணவர்கள், ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

பாசையூர் ஆயுர்வேத வைத்திய அதிகாரி வைத்தியர் அனுசுயா, கரவெட்டி பிராந்திய சித்த மருத்துவமனை வைத்தியர் பிரபாகரன் ஆகியோர் யோகாவின் நன்மைகள் பற்றிய நுண்ணறிவு விளக்கங்களை வழங்கினர்.

துணைத் தூதரகத்தில் யோகா பாடம் நடத்தும் யோகா ஆசிரியர் உமாசுதன், அவரின் மாணவர்கள் மற்றும் இந்தியா கோர்னர் மாணவர்களின் ஆதரவுடன் யோகா செயல்பாட்டுக்கு தலைமை தாங்கினார்.

நிகழ்வில் பங்கேற்ற துணைத் தூதுவர் சாய்முரளி, “இதுபோன்ற முதல் யோகா நிகழ்வை நடத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் யோகாவை இணைக்க ஊக்குவித்தார். ஐ. சி. சி. ஆர். இந்திய உதவித்தொகையின் கீழ் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு தெரிவித்த அவர், இந்த கல்விச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாணவர்களை வலியுறுத்தினார்.

இந்திய துணைத் தூதரக ஏற்பாட்டில் நெடுந்தீவில் சர்வதேச யோகா தினம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)