இந்திய அமைதிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவேந்தல்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்திய அமைதிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவேந்தல்

இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (06) வியாழன் புத்தூர் வாதரவத்தையில் இடம்பெற்றது.

உயிரிழந்தவர்களின் உறவுகளால் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

1989ஆம் ஆண்டு வாதரவத்தையில் இந்திய அமைதிப்படையினரால் ஒன்பது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் நினைவாகவே இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் அஞ்சலியின் பின்பு கருத்து தெரிவிக்கையில்;

இந்திய அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு வந்த இந்திய இராணுவம் பல்வேறு இடங்களில் பொதுமக்களை படுகொலை செய்திருந்தது.

ஆனால் இவ்வாறான படுகொலைக்கு இன்றுவரையும் இந்திய அரசு எவ்வித மன்னிப்பும் கோரவில்லை.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதியும் வழங்கப்படவில்லை. தமிழ் மக்களாகிய நாம் இன்றும் ஏதிலிகளாகவே இருந்து வருகிறோம்.

படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு தூபி போரின் பின் கடந்த 2012ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரால் உடைக்கப்பட்டது. அந்த நினைவு தூபியை விரைவில் அமைத்து அவர்களை நினைவு கூருவதற்கு வழி செய்யவேண்டும் என்றார்.

இந்திய அமைதிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவேந்தல்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More
Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More