இங்கிலாந்தின் வெளிநாட்டு அலுவலகத்தின் எச்சரிக்கை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இங்கிலாந்தின் வெளிநாட்டு அலுவலகத்தின் எச்சரிக்கை

இங்கிலாந்திலிருந்து விடுமுறைக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோருக்காக ஒரு முக்கிய எச்சரிக்கையினை இங்கிலாந்தின் வெளிநாட்டு அலுவலகம் (UK Foreign Office) அறிவித்துள்ளது.

பலவித பிரச்சினைகள் நிலவும் நாடுகளாக ஏற்கனவே பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மேலும் 8 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த நாடுகள் ‘மிகவும் ஆபத்தான’ நாடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாகப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நாடுகளுக்கு ‘பயணிக்க வேண்டாம்’ எனக் கடுமையாக எச்சரித்துள்ளது வெளிநாட்டு அலுவலகம். இந்த நாடுகளாவன, உக்கிறைன் (Ukraine), பெலாறஸ் (Belarus), லெபனான் ( Lebanon), ஈரான்(Iran), சூடான் (Sudan), பலஸ்தீனிய நாடுகள் (Palestinian Territories), றஷ்யா (Russia), இஸ்ராயேல் (Israel) என்பனவாகும்.

மேலே குறிப்பிட்ட இந்த 8 நாடுகளுக்களிலும் யுத்தத்தினால் சுற்றிலாப் பயணிகளுக்கு ஆபத்துகள் ஏற்படலாம் என்ற காரணத்தினால் சுற்றிலாப் பயணிகளைப் போக வேண்டாம் என இங்கிலாந்தின் வெளிநாட்டு அலுவலகம் அறிவித்தலை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.