ஆணைக்குழு நியமிக்க வேண்டும்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஆணைக்குழு நியமிக்க வேண்டும்

முஸ்லிங்களுக்கு அநீதி இடம்பெற்றுள்ள ஜனாஸா எரிப்பை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை உடனடியாக நியமிக்க வேண்டும் என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் றஹ்மான் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

உடல் உறுப்புகளை தகனம் செய்தல், அடக்கம் செய்தல் மற்றும் தானம் செய்தல் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அறிவித்துள்ள புதிய சட்ட விதிமுறைகள் தொடர்பான ஜனாதிபதியின் யோசனை விவகாரத்தில், கொவிட் தொற்றுக்குள்ளான சடலங்களை தகனம் செய்தமை தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. அந்த உரைகளின் போது முஸ்லிம் ஜனாஸாக்களை தீக்கிரையாக்கிய சம்பவத்தை முஸ்லிம் சமூகம் மறந்துவிட்டு தகனத்தில் ஈடுபட்ட குழுவினரை மன்னிக்க வேண்டும் என்று அந்த உரையிலிருந்து ஜனாதிபதி எதிர்பார்க்கின்றாரா?

தகனத்தில் ஈடுபட்ட குழுவினரை மன்னிக்க வேண்டும் என்று ஜனாதிபதி எதிர்பார்த்தால் முஸ்லிம் சமூகம் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடையும். அதற்குக் காரணம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரிவினைவாத, தீவிரவாதச் சிந்தனைகள் இல்லாத மனிதாபிமானி என்பதை இந்நாட்டு மனிதாபிமான சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காரும் அந்த கருத்தை தொனிப்பட தெரிவித்திருந்தார்.

எனவே, கொவிட் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பாக முடிவெடுத்த குழு தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தவும், பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் மனங்களை சாந்தப்படுத்தவும் ஜனாதிபதி ஆணைக்குழுவை அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் உடனடியாக நியமிக்க வேண்டும். தகனம் மூலம், அநியாய சம்பவத்தை செய்த குழுவுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என முஸ்லிம் சமூகத்தின் சார்பில் இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறேன்.

பூகோள அரசியல் சதிக்காக உடல்களை தகனம் செய்ய முடியும் என்ற முடிவை ஒரு சிறு குழுவினர் எடுத்தார்கள் என்றால் அவர்களின் பின்னால் கண்ணுக்குத் தெரியாத சக்தி இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது நாட்டுக்கு நல்லது. ஏனெனில் நாடளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற கடும்போக்கு சிந்தனை கொண்டவர்கள் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு ஆதரவாக நின்ற போது அதே அரசாங்கத்தின் மற்றுமொரு தரப்பு எதிர்த்தாக பாராளுமன்ற உறுப்பினர்களான வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை சாதாரணமாக கடந்து செல்லவோ அல்லாதது நிராகரிக்கவோ முடியாது. அத்துடன், பேராசிரியர் மெத்திகாவுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிக்கவும் முடியாது.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது அமைச்சின் ஊடாக மேற்கொண்ட ஆய்வு அறிக்கையில் கொரோனா வைரஸ் நீரினால் பரவுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த குழுவின் அறிக்கைக்கு சிங்கள தேசியவாத முகாமை பிரதிநிதித்துவப்படுத்திய மெதகொட அபயதிஸ்ஸ தேரர், கலகொட அத்தே ஞனசார தேரர், விமல் மற்றும் கம்மன்பில எம்.பி.க்கள் ஆதரவாக இருந்தால், பேராசிரியர் மேத்திகா பிரதிநிதித்துவப்படுத்தும் குழு ஏன் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதை எதிர்த்தது?

முஸ்லிம் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டமை இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு அநீதி இழைத்தது என்பதையே அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது. இதுவரை பல்வேறு தரப்பினராலும் வெளியான கருத்துகள் அனைத்தும் உண்மைகளையே உணர்த்துகின்றன. இந்த அநியாயம் முஸ்லிம் சமூகத்தின் இதயங்களை கடுமையாக தாக்கியுள்ளதுடன் நிகழ்காலத்திற்கு மட்டுமல்ல எதிர்காலத்திற்கும் பரப்பக்கூடிய ஒரு கருத்தியல் ஆயுதமாக அரசியல் மேடையில் இந்த விடயம் உள்ளது.

அந்த சித்தாந்தத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் எந்த அரசியல் தலைவர்களும் தகனம் செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களை ஒரே இடத்தில் கூட்டி அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்குப் பதிலாக அல்லது உடைந்த இதயங்களை அணைப்பதற்குப் பதிலாக, கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் அவர்களின் இதயங்களை இன்னும் கொதிப்படையச் செய்வார்கள் என்பதே உண்மை. எனவே ஈஸ்டர் தாக்குதலில் இறந்தவர்கள் சார்பாக கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு நடவடிக்கைகள் போன்று ஜனாஸாக்கள் தகனக்குள்ளாகிய குடும்பத்தின் மனித உரிமை மீறலுக்கு எதிராக நீதிமன்றத்தின் உதவியை நாடி தகன முடிவை எடுத்த குழுவுக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தின் மத, சிவில், அரசியல் தலைவர்கள் நீதியை பெற்றுக்கொடுக்க முன்நிற்க வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழு நியமிக்க வேண்டும்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More