அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகளை ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகளை ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் திருத்துவதற்கான முன்மொழிவுகளைக் கோரியுள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.presidentsoffice.gov.lk இலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். அனைத்து முன்மொழிவுகளையும் MS Wordஇல் Iskoola Pota எழுத்துருவில் 12 அளவில் அதன் மென் பிரதியை PDF வடிவில் மாத்திரம் தயாரித்து saec@presidentsoffice.lk என்ற உத்தியோகபூர்வ முகவரிக்கு 09-08-2024 ஆம் திகதி அல்லது அதற்கு முன் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

முன்மொழியப்பட்ட பதவியைத் தவிர வேறு பதவிகளுக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிப்பதாக இருந்தால், அவற்றுக்குத் தனியான படிவங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.presidentsoffice.gov இலிருந்து பதிவிறக்கம் செய்து இணைப்பு 01 மாதிரிப் படிவத்திற்கு அமைவாக நியாயமான காரணங்கள் அடங்கிய அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட தகவல்களின் மென் பிரதிகளை மட்டும் வழங்குவது போதுமானது. "செயலாளர், அரச சேவை சம்பள முரண்பாடுகளை நிவர்த்திக்கும் நிபுணர் குழு, ஜனாதிபதி செயலக அலுவலகம், காலி முகத்திடல், கொழும்பு 01" என்ற முகவரிக்கு 09.08.2024 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். அல்லது நேரில் கையளிக்க வேண்டும்.

இந்த அனைத்துப் பரிந்துரைகள் தொடர்பாகவும் நிபுணர் குழுவால் ஆய்வு செய்யப்படும் மற்றும் விண்ணப்பதாரரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனம் / தொழிற்சங்கம் / சிவில் அமைப்புடன் கலந்துரையாடுவதற்காக கால அவகாசம் வழங்கப்படும். இது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலம் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும்.

நிபுணர் குழு இந்த முன்மொழிவுகள் மற்றும் நியாயப்படுத்தும் அறிக்கை என்பவற்றை ஒரு பக்கத்திற்கு மட்டுமே வரையறுக்க வேண்டும் என்றும் குழு கோரியுள்ளது.



எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகளை ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)