100 நாட்கள் நோக்கி நடைபெற்று வரும் செயல் திட்டத்தின் 42 வது  நாள் கவனயீர்ப்பு போராட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' எனும் தொனிப் பொருளில் வடக்கு - கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நோக்கி நடைபெற்று வரும் செயல் திட்டத்தின் 42 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக் கிழமை (11) காலை 10.30 மணி அளவில் யாழ்ப்பாணம் மயிலிட்டி கடற்கரை துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கிராம மட்ட அமைப்புகள், விவசாய, மீனவ சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள், வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பணியாளர்களும் கலந்து கொண்டார்கள்.

குறித்த செயல் திட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களால் 100 நாள் செயற்திட்டத்திற்கான பொது மகஜர் வாசிக்கப்பட்டதுடன் வருகை தந்த பொது மக்களுக்கு அரசியல் தீர்வு திட்டம் மற்றும் 13 ஆம் திருத்த சட்டம் தொடர்பான சாதக பாதக விளைவுகள் தொடர்பாக சட்டத்தரணி சிவஸ்கந்த சிறி தெளிவுபடுத்தல் வழங்கினார். .

மேலும் கலந்து கொண்ட மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ கருத்துக்களை வழங்கியதுடன் அதே நேரம் அரசியல் தீர்வு விடயத்தில் மக்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான கருத்துக்களும் உள் வாங்கப்பட்டது.

குறித்த போராட்டம் வடக்கு - கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

100 நாட்கள் நோக்கி நடைபெற்று வரும் செயல் திட்டத்தின் 42 வது  நாள் கவனயீர்ப்பு போராட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

100 நாட்கள் நோக்கி நடைபெற்று வரும் செயல் திட்டத்தின் 42 வது  நாள் கவனயீர்ப்பு போராட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 18.05.2026

Read More
100 நாட்கள் நோக்கி நடைபெற்று வரும் செயல் திட்டத்தின் 42 வது  நாள் கவனயீர்ப்பு போராட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 18.05.2026

Read More
100 நாட்கள் நோக்கி நடைபெற்று வரும் செயல் திட்டத்தின் 42 வது  நாள் கவனயீர்ப்பு போராட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 16.05.2026

Read More
100 நாட்கள் நோக்கி நடைபெற்று வரும் செயல் திட்டத்தின் 42 வது  நாள் கவனயீர்ப்பு போராட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 15.05.2026

Read More