வடக்கு மாகாணத்தில் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
வடக்கு மாகாணத்தில் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் செவ்வாய்கிழமை முதல் வழங்கப்படஉள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தள்ளார்

மேலும் அவர் தெரிவித்ததாவது-

தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் பற்றிய விபரங்கள் அந்தப் பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரியால் வெளியிடப்படும். இவ்வாறு அறிவிக்கப்படும் தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முதலாவது, இரண்டாவது தடவைக்கான தடுப்பூசிகளும் வழங்கப்படும்.

20 தொடக்கம் 30 வயதிற்குஉட்பட்டவர்கள் அனைவரும் தமது அடையாள அட்டை போன்ற உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பித்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

யாழ். மாவட்டத்தில் தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு யாழ். போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பழை, பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும் செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி மற்றும் ஒக்ரோபர் மாதம் 2ஆம் திகதி சனிக்கிழமைகளில் காலை 8.00 மணிமுதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான மருந்துகளுக்கு ஒவ்வாமை இருப்பதாக சந்தேகிக்கப்பட்டும் பட்சத்தில், தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தமது பிரதேசத்திற்குரிய சுகாதாரவைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மேற் குறிப்பிட்ட வைத்தியசாலைகளில் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்