நாம் பாவிக்கும் தாமரைக் குளத்து நீரை வெளியேற்ற வேண்டாம் - கிராம மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
நாம் பாவிக்கும் தாமரைக் குளத்து நீரை வெளியேற்ற வேண்டாம் - கிராம மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

நாளாந்த பயன்பாட்டில் உள்ள மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அடம்பன் தாமரைக்குளத்து நீரை நன்னீர் மீன்பிடிக்காக அடம்பன் தாமரைக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் வெளியேற்றி வருகிறார்கள். நீரை வெளியேற்ற வேண்டாம் என்று மக்கள் குரல் கொடுக்கின்றனர்.

மேலும் இதனைப்பற்றிக் கூறுகையில்;

மாந்தை மேற்கு பிரதேச செயலகம் தெரிவிப்பதாவது,

குளத்தைச் சுற்றி குடியிருக்கும் மக்களின் அனுமதி பெற்ற பின்பே நீரை வெளியேற்ற வேண்டும்.

மேலும், மீன்பிடிப் பதற்காக மக்கள் பாவனையிலுள்ள இந்த குளத்து நீரை வீண்விரயம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் எவரும் விரும்பவில்லை.

இக் குளத்து நீரானது, பொதுமக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளின் குடிநீராகாரமாகவும், மேட்டு நில பயிர்ச்செய்கை க்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது

ஆனால் , இந்த குளத்து நீர் வற்றிப் போகுமானால் சுற்றவுள்ள கிணறுகளும் வற்றிப் போகும். இதனால், இந்நீர் வளத்தை நம்பியும் தங்கியும் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் இன்றித் தவிக்கும் ஆபாயம் ஏற்படும்.

இந்நடவடிக்கைக்குப் பதிலாக, வலைகளை போட்டு மீன் பிடிக்கலாம். எனவே, இவ்வாறான செயற்பாடுகளை அர அதிகாரிகள் கண்டித்து குளத்து நீர் வெளியேற்றப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தி பொதுமக்கள் பயன் பெற வழி செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டார்கள்

நாம் பாவிக்கும் தாமரைக் குளத்து நீரை வெளியேற்ற வேண்டாம் - கிராம மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ