தேர்தல்கள் தொடர்பான தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்க முஸ்ஸிம் காங்கிரஸுக்கு அழைப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
தேர்தல்கள் தொடர்பான தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்க முஸ்ஸிம் காங்கிரஸுக்கு அழைப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எதிர்வரும் 29ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் சட்டம், தேர்தல் முறைமை சம்பந்தமான தெரிவுக் குழுவின்முன் தோன்றி சாட்சியமளிக்க இருக்கின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவுக் குழுவின் முன்னிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வாக்கு மூலங்களை நெறிப்படுத்தவுள்ளார்.இதில் பல்வேறு ஆதாரபூர்வமான ஆவணங்களை முன்வைத்து முஸ்லிம் காங்கிரஸ் சாட்சியமளிக்கும்.

அத்துடன், சிறுபான்மையின கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ ஆகியோர் பிரஸ்தாப பாராளுமன்ற தெரிவுக் குழுவில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தத் தெரிவுக் குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இடம் பெற வேண்டியதன் அவசியம் ஆரம்பத்திலிருந்தே பல தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

தேர்தல்கள் தொடர்பான தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்க முஸ்ஸிம் காங்கிரஸுக்கு அழைப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்