தியாக தீபம் திலீபனின் 34ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தியாக தீபம் திலீபன் அவர்களின் 34ம் ஆண்டு நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

தியாக தீபம் திலீபன் அவர்கள் 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் திகதி 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

தமிழ் தேசிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம் கே சிவாஜிலிங்கம் அவர்களால் 5 அம்சக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

1.இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலையை நிரூபித்தல்

2.இனப்படுகொலைக்காக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துதல்

3.இனப் படுகொலை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்தல்

4.தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சர்வதேச குற்றங்களுக்காக ஈடுசெய் நீதி கிடைப்பதை உறுதி செய்தல்

5.ஈடு செய் நீதி கிடைப்பதன் மூலம் இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளைத் தெரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் பொதுசன வாக்கெடுப்பு போன்ற 5 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இந்த 5 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான்,
அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1987.09.26ம் திகதி திலீபனின் தியாக உயிர் அவரது உடலை விட்டுப் பிரிந்தது.

இவரின் 34ம் ஆண்டு நினைவு தினம் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களால் மலர் தூவி, சுடரேற்றி அனுஷ்டிக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் 34ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்