திடீர் பீ.சி.ஆர். பிரசோதனைகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
திடீர் பீ.சி.ஆர். பிரசோதனைகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

டாக்டர். பறூஸா நக்பர்

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் உள்ள நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பொது மக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன.

நேற்றும் இன்றும் நிந்தவூர் பிரிவில் உள்ள நான்கு மத்திய நிலையங்களில் 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களிற்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்ட நிலையில் நாளை முதல் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் குறித்த வயதெல்லைக்குரியவர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளலாமென சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பறூஸா நக்பர் அறிவித்துள்ளார்.

தற்சமயம் கொவிட் - 19 வைரஸ் பரவலும் அதனாலான மரண வீதமும் இப்பிரதேசத்தில் குறைந்துவரும் நிலையிலும் திடீர் பீ.சி.ஆர் பரிசோதனைகள் பிரதேசத்தின் பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பறூஸா நக்பரின் ஆலோசனைக்கு அமைய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நிந்தவூர் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் இன்று குறித்த பீ.சி.ஆர் பரிசேதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

திடீர் பீ.சி.ஆர். பிரசோதனைகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்