செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட மூவரின் கைதிற்கு தொடரும் கண்டனம் - எம்.ஏ.சுமந்திரன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்., நல்லூரில் தியாக தீபம் திலீபனை நினைவேந்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது என அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நினைவேந்தலைத் தடை செய்ய முடியாது. அதேபோன்று நினைவேந்தலுக்கு நீதிமன்றத்தினூடாகத் தடைகளும் விதிக்க முடியாது.

எந்தவொரு அத்துமீறலும் இன்றி, மக்கள் கூட்டம் இன்றி, கொரோனா பாதுகாப்பு மீறல் இன்றி ஓர் மக்கள் பிரதிநிதி மேற்கொண்ட நினைவேந்தலை பொலிஸார் கையாண்ட விதம் மிகவும் பாரதூரமானது.

கஜேந்திரன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்று தெரிந்தும் ஒரு சாதாரண மனிதனுக்கு வழங்க வேண்டிய கௌரவத்தையேனும் வழங்காது அவரை இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி குற்றவாளியைக் கொண்டு செல்வது போன்று பொலிஸார் கொண்டு சென்றனர்.

இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது" - என்றார்.

செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட மூவரின் கைதிற்கு தொடரும் கண்டனம் - எம்.ஏ.சுமந்திரன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்