சர்வதேச கடல் எல்லைக்குள் நுழையும் மீன்பிடுக் கலங்களுக்கு கண்காணிப்புக் கருவிகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
சர்வதேச கடல் எல்லைக்குள் நுழையும் மீன்பிடுக் கலங்களுக்கு கண்காணிப்புக் கருவிகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

சர்வதேச நாடுகளின் கடல் எல்லைகளுக்குள் தவறுதலாக அல்லது சட்டவிரோதமாக நுழைகின்ற இலங்கையின் ஆழ் கடல் மீன்பிடிக் கலன்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர் பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கியுள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத் தில் நேற்று நடைபெற்ற ஐரோப் பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சைய்பி தலைமையி லான குழுவினருக்கும் கடற் றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இரா ஜாங்க அமைச்சர் கஞ்சன விஜே சேகர ஆகியோருக்கும் இடையி லான கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிடப்பட்ட விடயம் தெளிவுபடுத்தப்பட்டது.

இச்சந்திப்பின் போது, ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுப டும் இலங்கை கடற்றொழிலா ளர்கள், எல்லைதாண்டிச் சென்று வெளிநாடுகளில் கைதா கின்ற சமயங்களில் குறித்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள், பின்னர் அவர்கள் இலங்கைக்கு திரும்பு கின்றபோது படகு உரிமையா ளர்களுக்கு எதிராகவும் படகில் பணியாற்றிய தொழிலாளர்கள் மீதும் இலங்கையில் மேற்கொள் ளப்படும் சட்ட நட வடிக்கைகள் போன்றவை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றி யத்தின் தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

இந்நிலையில், கடற்றொழில் அமைச்சினால் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆழ் கடல் மீன்பிடிக் கலங்களுக்கு கண்காணிப்பு கருவிகளை பொருத்தும் செயன்முறையை சுட்டிக்காட்டிய கடற்றொழில் அமைச்சர், குறித்த செயற்றிட் டங்கள் நிறைவடைந்ததும் ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடும் இலங்கையின் பலநாள் கலங் களை சிறப்பாக கண்காணிக்க முடியும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தினார்.

இதுதவிர, மீன்பிடி தொடர் பான சர்வதேச நியமங்களுக்கு அமைய ஆழ்கடல் மீன்பிடி செயற்பாடுகளை ஒழுங்குபடுத் துவது மற்றும் மீன்பிடிக் கலங் களின் எண்ணிக்கையை வரையறை செய்வது தொடர் பாகவும் கடற்றொழில் அமைச்சு அவதானம் செலுத்தி வருவதா கவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக் ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க, இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜெயந்த சந்திரசோம, கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த மற் றும் சம்மந்தப்பட்ட அதிகாரிக ளும் கலந்து கொண்டனர்.

சர்வதேச கடல் எல்லைக்குள் நுழையும் மீன்பிடுக் கலங்களுக்கு கண்காணிப்புக் கருவிகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்