கோவிட் தொற்றலும் இறப்பும் அப்டேட்   (26.09.2021) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்.மாவட்டத்தில் 17 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளான 27 பேர் ஞாயிற்றுக்கிழமை பிசிஆர் பரிசோதனைகள் மூலம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் 17 பேர் - யாழ்.போதனா வைத்தியசாலையில் 12 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 03 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 பேர் - வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், முல்லைத்தீவு விமானப்படை முகாமில் 02 பேர், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்.

வவுனியா மாவட்டத்தில் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

மன்னார் மாவட்டத்தில் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் ஊடாக குறித்த நபருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் அலோசியஸ் கிறேஸ்மேரி (வயது 51) என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றலும் இறப்பும் அப்டேட்   (26.09.2021) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்