'கிராமத்துடனான உரையாடல்' மக்கள் சந்திப்பு. - பருத்தித்துறை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
'கிராமத்துடனான உரையாடல்' மக்கள் சந்திப்பு. - பருத்தித்துறை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இன்று 'கிராமத்துடனான உரையாடல்' மக்கள் சந்திப்பு பருத்தித்துறையில் இடம்பெற்றது. இவ்வுரையாடலில், கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடுகளினால் நடைமுறைப்படுத்தக்கூடிய முதன்மையான அபிவிருத்தி முன்மொழிவுகளைப் பற்றிய திட்டங்கள் எதிர்வு கூறப்பட்டன.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கும் 03 மில்லியன் ரூபா அபிவிருத்திக்காக ஒதுக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வொதுக்கீடு அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்திற்கமைவாக, கௌரவ பிரதமர் அவர்களின் வழிகாட்டுதலில், நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்களினால், தீர்மானிக்கப்பட்டது.

இக் கொள்கைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் விதமாக கிராமங்களுக்குமான களவிஜயத்தினை ,பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் இன்று (01.10.2021) பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 35 கிராமங்களுக்குமான களவிஜயத்தினை மேற்கொண்டார்.

இவ்விஜயத்தில், பிரதேச செயலாளர் , உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலக அதிகாரிகள், பருத்தித்துறை, கரவெட்டி தொகுதி இணைப்பாளர்கள் மற்றும் கிராம அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு
கிராமங்களுக்கான உட்கட்டுமானம், வாழ்வாதாரம், சூழலியல் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

'கிராமத்துடனான உரையாடல்' மக்கள் சந்திப்பு. - பருத்தித்துறை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்