அச்சத்துடன் வாழும் அல்வாய் மக்கள். வெட்டுக்குமாரின் அட்டகாசம்! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

அல்வாய் வடக்கு மகாத்மா கிரமாத்தில் வாள் வெட்டுக்குழு தொடர் அட்டகாசம், இரண்டு வீடுகள் தீக்கிரை, பல இலட்சம் பெறுமதியான பொருட்களும் தீக்கிரை பல வீடுகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளன,

முக்கிய மான வாள்வெட்டு குழு தாதா வெட்டுக்குமார் கைது பலர் தலைமறைவு

கடந்த 2 ம் திகதி மது போதையில் சென்ற அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தை சேர்ந்த பிரபல வாள் வெட்டு குழு, தலைவர் வெட்டுக்குமாரால் கடுமையாக தாக்கப்பட்டு வீடுகள் உடைக்கப்பட்டு பலத்த தாக்குதலுக்கு உள்ளான ஆறு குடும்பங்கள் அன்றிரவே குறித்த வெட்டுக்குமாருக்கு அஞ்சி தலைமறைவாகி வாழந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரண்டு வீடுகள் பெட்ரோல் ஊற்றி தீக்கிரையாக்கப்பட்டதுடன், பல வீடுகளின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டும் அங்கிருந்த சொத்துக்கள் உடமைகள் அனைத்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

குறித்த வாள் வெட்டுக்குழு தாதாவான வெட்டுக்குமார் கஞ்சா கடத்தல், களவு, கசிப்பு உற்பத்தி, உட்பட வீடுகளுக்குள் புகுந்து களவாடுதல் ஆட்களை மிரட்டி பணம் பொருள் பறித்தல் உட்பட பல்வேறு கொள்ளை சம்பவங்கள், கொலைச் சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருக்கலாம் என வழக்குகளும் உள்ளன.

குறித்த தாதா அவரது வாள் வெட்டுக் குழுவுக்கு அச்சத்தில் அல்வாய் வடக்கு மகாத்தமா கிராம.மக்கள் உட்பட பல கிராம மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

வெட்டுக்குமார் நேற்று முன்தினம் பருத்தித்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவனது சகோதரனான ஜெயா ஏன்றழைக்கப்படும் ஜெயராசா அல்லது கள்ள ஜெயா தலைமறைவாகியுள்ளதுடன் இச் சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை போலீசாரால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வெட்டுக்குமார் கைது செய்யப்பட்டும் அவரது சகோதரன் ஜெயா கைது செய்யப்படாத நிலையில் பிரதேச மக்கள் தினந்தினம் உயிர் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்

அச்சத்துடன் வாழும் அல்வாய் மக்கள். வெட்டுக்குமாரின் அட்டகாசம்! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்