யாழ். மருத்துவ பீட மாணவி வீட்டிலே சடலமாக மீட்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட முதலாமாண்டு மாணவி ஒருவர் இன்று அவருடைய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

சுன்னாகத்தைச் சேர்ந்த சாருகா என்ற மாணவி உயிழந்தவராவார்.

இவர் உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார். குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப்பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர் என்றும் அண்மையில் வெளியாகிய பல்கலைக்கழக பரீட்சை முடிவுகளிலும் நிறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ். மருத்துவ பீட மாணவி வீட்டிலே சடலமாக மீட்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்