யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள கோவிட்-19 தொற்றாளர்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று மாலை 4 மணிவரையான கடந்த 24 மணிநேரத்தில் 375 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

அவர்களில் 74 பேர் பிசிஆர் பரிசோதனையிலும் 301 பேர் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 61 பேரும் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 48 பேரும் யாழ்ப்பாணம் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 40 பேரும் சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 38 பேரும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 37 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வேலணையில் 7 பேரும் ஊர்காவற்றுறையில் 10 பேரும் காரைநகரில் 5 பேரும் நல்லூரில் 17 பேரும் சண்டிலிப்பாயில் 31 பேரும் உடுவிலில் 28 பேரும் தெல்லிப்பழையில் 35 பேரும் பருத்தித்துறையில் 13 பேரும் மருதங்கேணியில் 5 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2020 மார்ச்சிலிருந்து இன்று மாலை வரை 12 ஆயிரத்து 460 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் ஆயிரத்து 161 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 739 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள கோவிட்-19 தொற்றாளர்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்