மாவட்ட ரீதியான கொரொனா தொற்றும், மரணமும் 17.09.2021 | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வடக்கு மாகாணத்தில் இந்த மாதத்தின் முதல் 15 நாட்களிலும் 6 ஆயிரத்து 667 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன் 225 பேர் உயிரிழந்தனர்.

வடக்கு மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர் கோவிட்-19 நோயால் உயிரிழந்த நிலையில் இந்த மாதத்தின் முதல் 15 நாள்களில் 225 பேர் உயிரிழந்தனர்.

சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி, கடந்த புதன்கிழமை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 42 தொற்றாளர்களும் வவுனியா மாவட்டத்தில் 59 தொற்றாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 64 தொற்றாளர்களும் முல்லைத்தீவில் 25 தொற்றாளர்களும் மன்னாரில் 10 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3 பேரும் வவுனியா மாவட்டத்தில் 4 பேரும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா இருவரும் கோவிட்-19 நோயால் உயிரிழந்தனர்.

2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 33 ஆயிரத்து 737 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 634 பேர் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தனர். அதிகப்படியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 618 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 356 பேர் உயிரிழந்தனர்.

மாவட்ட ரீதியான கொரொனா தொற்றும், மரணமும் 17.09.2021 | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்