திருமண நிகழ்வில்13சிறார்கள் உட்பட 34 பேருக்கு கொரோனா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாணம் காரைநகரில் ஊரடங்கு வேளை பந்தல் அமைத்து நூறுக்கும் அதிகமானோர் பங்குகொண்டிருந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற 13சிறார்கள் உட்பட 34 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காரைநகரைச் சேர்ந்த 81 பேரின் பிசிஆர் மாதிரிகள் இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த தொற்றாளர்கள் யார் என்று, காரைநகர் சுகாதாரத் தரப்பினரைத் தொடர்புகொண்டு கேட்டபோது திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர்கள் உறுதிப்படுத்தினர்.

அவர்களில் 05, 07, 08, 09, 10, 11, 12, 13, 14, 15வயதுடைய 13 சிறார்களும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களை தனிமைப்படுத்தி அவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த முற்பட்டவேளை வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார உத்தியோகத்தர் உட்பட்டவர்களை தாக்க முற்பட்ட குற்றச்சாட்டில் 03 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருமண நிகழ்வில்13சிறார்கள் உட்பட 34 பேருக்கு கொரோனா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்