கைது செய்யப்பட்ட செல்வராசா கஜேந்திரன் (பா.உ.) பிணையில் செல்ல அனுமதி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பொலிஸ் நிலையத்திலிருந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்டபோது கைதுசெய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் சற்று முன்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் எதிர்வரும் 27ஆம் திகதி யாழ்.மாவட்ட நீதிமன்றில் அவர்கள் முன்னிலையாகவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இன்றைய தினம் அஞ்சலி செலுத்த சென்ற போது பொலிஸார் தடை விதித்தனர்.

நீதிமன்ற தடையுத்தரவு இன்றி என்னை தடுக்க முடியாது என கூறி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தடைகளை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்டவேளை அவரையும் அவருடன் சென்றவர்களையும் பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட செல்வராசா கஜேந்திரன் (பா.உ.) பிணையில் செல்ல அனுமதி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்