கடத்திவரப்பட்ட மஞ்சள் கைப்பற்றப்பட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
கடத்திவரப்பட்ட மஞ்சள் கைப்பற்றப்பட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்.குருநகா் கடற்பகுதி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்ட சுமாா் 369 கிலோ மஞ்சள் கடற்படையினால் கைப்பற்றப்பட்டிருக்கின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.குருநகா் - ஐந்து மாடி கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான படகு ஒன்றை அவதானித்த கடற்படையினர் அதனை பின் தொடர்ந்தபோது படகில் இருந்தவர்கள் தப்பிச் சென்றிருக்கின்றனா். இதனையடுத்து கடற்படையினா் படகினை சோதனையிட்டபோது அதில் மஞ்சள் இருப்பது அவதானிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் கடற்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடத்திவரப்பட்ட மஞ்சள் கைப்பற்றப்பட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்