போதைப்பொருள்களுடன் மூவர் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களுடன் பெண் உள்பட மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 20 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று கரணவாய் பகுதியில் போதைப்பொருளுடன் நடமாடிய போதே 30 வயது பெண்ணும் 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர்.

இளைஞரில் ஒருவர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் என்றும் மற்றைய இளைஞரும் பெண்ணும் கரணவாய் - சமரபாகு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்கள் மூவரும் விசாரணைகளின் பின் நாளை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

போதைப்பொருள்களுடன் மூவர் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY