தலைமை  அலுவலகக் கட்டிடம் திறப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

பனை அபிவிருத்தி சபையின் புதிய வடமாகாண தலைமை அலுவலகக் கட்டிடம் வியாழக்கிழமை (13) கைதடியில் திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத் தொகுதியே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு விழாவில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி, பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜா, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் க. மகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த கட்டடத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் முழுமையாக பூர்த்தியடையாத நிலையில் கீழ்த்தளம் மாத்திரம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தலைமை  அலுவலகக் கட்டிடம் திறப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY