சர்வமத தலைவர்கள் மௌன விரதமா? | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

பல்லின மக்கள் வாழும் நாட்டில் அவரவர் இன மற்றும் மத அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஐனநாயகம் கொண்ட நாட்டில் இதனை மாற்றியமைக்கும் ஆட்சியாளர்களை தடுத்து நிறுத்த சர்வமத தலைவர்கள் முன் வர வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புராதன பஞ்ச ஈச்சரங்களில் பாடல் பெற்ற தலமான திருமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் சிவாலயம் எல்லோரும் அறிந்த வரலாற்றுப் பெருமைகளைக் கொண்டது.

இவ்வாறிருக்கையில் திட்டமிட்டு இலங்கை அரசாங்கம் அதன் வரலாற்றை மாற்றியமைக்க மேற்கொள்ளும் முயற்சியை தடுக்க சர்வமத தலைவர்கள் தலையிடாமல் இருப்பது ஏன்? மௌனம் காப்பது நல்லதல்ல என சைவ மக்கள் வேதனைப்படுகின்றனர்.

கோணேசர் கோயில் வளாகத்தில் கடைகள் அமைக்கும் வேலைத்திட்டம் விரிவடைந்து கடலை நோக்கி அமைந்துள்ள கோவிற் பகுதியின் கீழ் உள்ள கடற்பகுதியை ஆய்வு என்ற போர்வையில் அகழ்ந்து எடுப்பதற்கு தொல்லியல் திணைக்களம் முயற்சிக்கின்றது. இது திட்டமிட்ட சதிநடவடிக்கையாக அரச பின்புலத்தில் நிகழ்த்தப்படுகின்றது.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒவ்வொரு இனத்தினதும் இன மற்றும் மத அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதுவே ஐனநாயகம் இதனை மாற்றியமைக்கும் ஆட்சியாளர்களை தடுத்து நிறுத்த சர்வமத தலைவர்கள் முன் வர வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வமத தலைவர்கள் மௌன விரதமா? | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)