யாழ் பல்கலைக்கழகத்துக்கு கனடிய தூதரக அதிகாரிகள் உத்தியோக பூர்வமாக வருகை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கனடிய தூதரக அதிகாரிகள் திங்கட்கிழமை (25.10.2021) காலை யாழ்பபாண பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வமாக வருகையை மேற்கொண்டனர்.

கனடிய அரசாங்கத்தின் நிதி அனுசரணையில் இலங்கையிலுள்ள நான்கு பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் திட்ட மேம்பாடு குறித்து ஆராயவே கனடிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் குழு வருகை தந்தது.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் டொம் பிறவ்ணல் தலைமையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி ஆர். விஜயலட்சுமி, திட்ட ஆலோசகர் ஆகியோரே கனடியத் தூதரகத்தின் சார்பில் வருகை தந்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி கலாநிதி கே. சுதாகர், மொழிபெயர்ப்புகள் கற்றல் துறையின் தலைவர் எஸ். கண்ணதாஸ் ஆகியோரை கனடிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் சந்தித்து திட்ட மேம்பாடு குறித்து கேட்டறிந்தனர்.

யாழ் பல்கலைக்கழகத்துக்கு கனடிய தூதரக அதிகாரிகள் உத்தியோக பூர்வமாக வருகை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
யாழ் பல்கலைக்கழகத்துக்கு கனடிய தூதரக அதிகாரிகள் உத்தியோக பூர்வமாக வருகை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்