முதலாவது இடத்தைத் தனதாக்கிய மடுக்கல்வி வலயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
முதலாவது இடத்தைத் தனதாக்கிய மடுக்கல்வி வலயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கல்வி பணிப்பாளர் க.சத்தியபாலன்

2019ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் 5ஆவது நிலையிலும், தேசிய ரீதியில் 73 வது நிலையிலும் இருந்த மன்னார் மாவட்டத்தின் மடு கல்வி வலயம் கடந்த வருடம் 2020ஆம் ஆண்டு இடம் பெற்று அன்மையில் வெளிவந்த க.பொ.த சாதாரண தர பரிட்சையில் வட மாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களில் மன்னார் மாவட்டத்தின் மடு கல்வி வலயம் முதலாவது இடத்தை பெற்றுள்ளதையிட்டு மாணவர்களின் பெற்றோர் அதிபர், ஆசிரியர் மற்றும் கல்வி நிர்வாகத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

வட மாகாண ரீதியில் முதலாவது இடத்தையும் தேசிய ரீதியில் 35 வது இடத்தையும் மடு கல்வி வலயம் பெற்றுள்ளது.

மடு வலயக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய முன்னை நாள் வலயக்கல்வி பணிப்பாளர் க.சத்தியபாலன் அவர்களின் முயற்சியினாலும், மடு கல்வி வலயத்தில் உள்ள ஆசிரியர்களின் அயராத முயற்சியினாலும், அர்ப்பணிப்பான சேவையினாலும் குறித்த சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளதாக சாதனையாளர்களின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மடு கல்வி வலயத்தில் உள்ள மாணவர்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

மாணவர்கள் உரிய போக்குவரத்து வசதி இல்லாமையினால் பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை, மேலதிக வகுப்புக்கு மாணவர்கள் செல்வதில் காணப்படும் இடர்கள் உள்ளிட்ட பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்த மடு கல்வி வலய மாணவர்கள் பாடசாலை கல்வியையும் பாடசாலை ஆசிரியர்களையும் மாத்திரமே நம்பி இருந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

முதலாவது இடத்தைத் தனதாக்கிய மடுக்கல்வி வலயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ