மன்னார் மாவட்டத்தில் 1660 மாணவர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

2021ம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையில் மன்னார் மாவட்ட பாடசாலைகளிலிருந்து தோற்ற இருக்கும் மாணவர்களுக்கும் அத்துடன் இம் மாவட்டத்திலிருந்து பாடசாலை ஊடாக இரண்டாம் முறை இப் பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் முதல் கட்டமாக 21.10.2021 வியாழக்கிழமை பாடசாலைகளில் மாணவர்களுக்கு இன்று ஏற்றப்பட்டன.

பின் நாளாடைவில் இத் தடுப்பூசிகள் ஏனைய வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கும் திட்டம் விரிவடையும் என மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வைத்திய அதிகாரி கதிர்காமநாதன் சுதாகர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் மன்னார் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்

பள்ளிமுனை புனித லூசியா மகா வித்தியாலயத்தில் காலை 8.30 மணி தொடக்கம் 9.30 மணி வரை 67 மாணவர்களுக்கும்

சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் காலை 9.45 மணி தொடக்கம் 11 மணி வரை 271 மாணவர்களுக்கும்

அல் அஷார் தேசிய பாடசாலையில் காலை 11.15 மணி தொடக்கம் பிற்பகல் 12.30 மணி வரை 140 மாணவர்களுக்கும்

புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் காலை 8.30 மணி தொடக்கம் 10.30 மணி வரை 332 மாணவிகளுக்கும்

புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் காலை 10.45 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை 195 மாணவர்களுக்கும்

திருக்கேதீஸ்வரம் கௌரிஅம்பாள் பாடசாலையில் 12.30 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணிவரை 18 மாணவர்களுக்கும்

உயிலங்குளம் பாடசாலையில் 1.30 மணி தொடக்கம் 2 மணிவரை 12 மாணவர்களுக்கும்

நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வங்காலை புனித.ஆனாள் மத்திய மகா வித்தியாலயதத்pல் காலை 8.30 மணி தொடக்கம் காலை 8.45 மணிவரை 62 மாணவர்களுக்கும்

நானாட்டான் டிலாசால் பாடசாலையில் காலை 9 மணி தொடக்கம் காலை 9.45 மணிவரை 66 மாணவர்களுக்கும்

முருங்கன் மகா வித்தியாலயத்தில் காலை 10 மணி தொடக்கம் நண்பகல் வரை 113 மாணவர்களுக்கும்

மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் காலை 9 மணி தொடக்கம் காலை 11.30 மணிவரை 215 மாணவர்களுக்கும்

முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முசலி தேசிய பாடசாலையில் காலை 7.30 மணி தொடக்கம் நண்பகல் 1 மணிவரை 146 மாணவர்களுக்கும்

காக்கையன்குளம் முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் காலை 9 மணி தொடக்கம் காலை 11 மணிவரை 23 மாணவர்களுக்கும்

மொத்தமாக 1660 மாணவர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசிகள் இன்று ஏற்றப்பட்டன.

மன்னார் மாவட்டத்தில் 1660 மாணவர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ