புதிதாக புனரமைக்கப்பட்ட பூசை மண்டபம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

நயினாதீவு விகாரையில் புதிதாக புனரமைக்கப்பட்ட பூசை மண்டபத்தின் திறப்புவிழா இலங்கைக் கடற்படைத் தளபதியின் பங்கேற்புடன் சிறப்பாக இடம்பெற்றது.

புதிதாக கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட பூசை மண்டபத்தை கடற்படைத் தளபதி பிரதம விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

நயினாதீவில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உலர்உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வும், நயினாதீவில் உள்ள மக்களுக்கு சமைத்த மதிய உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நயினாதீவு விகாரையின் விகாராதிபதி, கடற்படை உயரதிகாரிகள் மற்றும் பௌத்த பிக்குகள் கலந்துகொண்டனர்.

புதிதாக புனரமைக்கப்பட்ட பூசை மண்டபம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்