நெக்டா நிறுவனத்தினால் யாழ் மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடி ஊக்குவிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ் மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நெக்டா நிறுவனத்தினால் மூன்றாம் கட்டமாக குடாரப்பு புன்னையடி களப்புப் பகுதியில் 80 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

கடல் தொழில் அமைச்சின் 5 லட்சம் மீன் குஞ்சுகள் விடும் வேலைத்திட்டத்தில் ஏற்கனவே அம்பன் மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் தலா 75000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

மூன்றாம் கட்டமாக கடந்த திங்கட்கிழமை(25) மாலை குடாரப்பு புன்னையடி களப்பு பகுதியில் 80 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் பிரதிநிதியாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் மற்றும் நீரியல் வள திணைக்கள விரிவாக்க உத்தியோகத்தர் பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நெக்டா நிறுவனத்தினால் யாழ் மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடி ஊக்குவிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்