நிறுத்தப்பட்டிருந்த வாகனத்துடன் மோதி இளைஞர் பலி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகரில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தினரின் வாகனத்துடன் மோதி இளைஞர் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு , சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு - வேணாவில் பகுதியை சேர்ந்த மாரிமுத்து பவிசாந்த் (வயது21) என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு மின்சாரம் தடைப்பட்டிருந்ததுடன், மழையும் பெய்து கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார் என்று கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நிறுத்தப்பட்டிருந்த வாகனத்துடன் மோதி இளைஞர் பலி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்