நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாகி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாகி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

குமரேஷ் ஷயன்தனா குமாரதாஸ் மாப்பாண முதலியார்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாகியாக குமரேஷ் ஷயன்தனா குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாகியான குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியார் கடந்த 09ஆம் திகதி இறைபதமடைந்தார்.

அன்றைய தினம் (09.10.2021) தொடக்கம், குமரேஷ் ஷயன்தனா குமாரதாஸ் மாப்பாண முதலியார் காலம் ஆரம்பமானது.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (24.10.2021) காலை குமரேஷ் ஷயன்தனா குமாரதாஸ் மாப்பாண முதலியார் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிப்பாட்டில் கலந்து கொண்டிருந்தார்.

குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியார் 1964 டிசெம்பர் 15 முதல் கடந்த 09 ஆம் திகதி இறைபாதமடையும் வரை பத்தாவது நிர்வாகியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாகி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்