சட்டவிரோத கும்பலைத் தட்டிக் கேட்டதற்கு வாள் வெட்டு, பொருள் சேதம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டவரை தட்டிக்கேட்ட பொதுமக்களின் வீடுகள் மீது சுமார் 50 பேர் கொண்ட வாள்வெட்டு குழு மேற்கொண்ட தாக்குதலில் மூவர் படுகாயம், 8 வீடுகள் மூன்று மோட்டார் சைக்கிள்கள் சேதமாகப் பட்டுள்ளதுடன் 2 மோட்டார் சைக்கிள்களும் தொலைபேசிகள் சிலவும் கொள்ளை கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ள சம்பவம் வடமராட்சி கற்கோவளம் புனித நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி புனிதநகர் பகுதியில் கஞ்சா, கசிப்பு, போதைவஸ்து உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கையில் நபர் ஒருவர் ஈடுபட்டு வருவதாகவும் இது தொடர்பில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடந்த

ஞாயிற்றுக்கிழமை(10) காலை சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவரினை தட்டி கேட்டதாகவும் தெரியவருகிறது. இதனைத்தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் மேற்படி கிராமத்துக்குள் வாள்களுடன் புகுந்த சுமார் 50 வரையான கும்பல் சட்ட விரோத செயல்பாட்டை தட்டிக்கேட்டவர்களின் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதில் மூவர் வாள் வெட்டிற்கு இலக்காகினர். 8 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளதுடன் 3 மோட்டார் சைக்கிள்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சூம் வழிமூலம் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களின் தொலைபேசிகளும் கொள்ளையிட்டுச் செல்லப்பட்டுள்ளன.

இச்சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பருத்தித்துறை பொலீசார் அப்பகுதிக்கு இரவு சென்றதாகவும் பொலீசாரை வாள் கொண்டு அவர்கள் மிரட்ட முற்பட்ட தான் காரணமாக பொலீசார் ராணுவத்தின் உதவியை கோரியிருந்தனர் இதனைத்தொடர்ந்து இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததை அடுத்து அக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர்.

சட்டவிரோத கும்பலைத் தட்டிக் கேட்டதற்கு வாள் வெட்டு, பொருள் சேதம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்