கொரோனாத் தொற்றால் குடும்பப் பெண் மரணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணொருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிசன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

துன்னாலை தெற்கு, கரவெட்டியைச் சேர்ந்த திருமதி ஜெசிகலா வசந்தன் (வயது- 45) என்பவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(26) இரவு உடல்நலக் குறைவு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

இவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிசன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை(27) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொரோனாத் தொற்றால் குடும்பப் பெண் மரணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்