அத்துமீறிய இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி வடமராட்சி கடற்பரப்பில் இரண்டு படகுகளில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு நீரியல்வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் இடம்பெற்றிருந்தது.

குறித்த மீனவர்கள் 23 பேரையும் காரைநகர் கடற்படை முகாமில் தடுத்துவைக்குமாறு உத்தரவிட்டிருக்கின்றார்.

அத்துமீறிய இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்