24 நாள் வயதுக் குழந்தை கொரோனாவினால் மரணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

பிறந்து 24 நாள்களேயான குழந்தை கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளது.

நீர்வேலியைச் சேர்ந்த பவிகரன் நிருஜா என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு குழந்தை அழைத்துச் செல்லப்பட்டது.
வெளிநோயாளர் பிரிவில் பரிசோதனை செய்தபோது குழந்தை உயிரிழந்தமை தெரியவந்தது.

பி.சி.ஆர் பரிசோதனையில் குழந்தைக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேமகுமார் மேற்கொண்டார்.

24 நாள் வயதுக் குழந்தை கொரோனாவினால் மரணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்